Saturday, 30 December 2017

புத்தாண்டு








புத்தாண்டு பூத்து 
புது மணம் வீசட்டும் 
புது ஒளி பிறந்து 
புது உயிர்கள் தோன்றட்டும் 
புத்துணர்ச்சி கொண்டு வீறுநடை போடட்டும் 
பெண்மையை போற்றட்டும் 
ஆண்மையை மதிக்கட்டும் 
ஏற்றத்தாழ்வுகள் விலகட்டும் 
புது சிந்தனை பிறக்கட்டும் 
வாழ்வில் வளம் பெருகட்டும் 
பழைய கசப்புகள் மறக்கட்டும் 
புதிய சர்க்கரை வெல்லம் நாவில் இனிக்கட்டும் 
பகைகள் நிரந்தரம் இல்லாமல் போகட்டும் 
உறவுகள் மேண்மை பெறட்டும் 
எல்லாம் உங்கள் வழி வரட்டும் 
எல்லாம் உங்கள் கை சேரட்டும் 
இல்லாமை நிலை மாறட்டும் 
பிரிவுகள் பறந்து போகட்டும் 
பரிவுகள் மனம் முழுவதும் பரவட்டும் 
இணைந்த கைகள் இனிய பாலமாகட்டும் 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... 

- மூ.முத்துச்செல்வி

புத்தாண்டு ஆசை









சிறகு விரித்தோடும் கிளிகள் போல் 
சிறகு விரித்து பறந்திட ஆசை! 

கதிரவன் கண் பட்டு நாணமுடன் 
விரியும் தாமரை இதழை தழுவிடும் 
பட்டாம்பூச்சியாய் காற்றில் பறந்திட ஆசை! 

மார்கழி பனியில் 
உடல் நடுங்கும் குளிரில் 
போர்வைக்குள் புதைந்திட ஆசை! 

சுதந்திர ஜன்னலில் 
காற்று வாங்கிட ஆசை! 
தனிமை மறந்திட ஆசை! 
பல வித பாடல்கள் 
பயின்றிட ஆசை!

தேனீ உழைப்பில் உள்ளம் 
தேனீக்களாய் மாறிட ஆசை! 

நிலவொளியில் 
நிலவின் மடியில் 
துயில் கொள்ள ஆசை! 

புதுமைகள் புரிந்திட ஆசை! 
தடைகள் கடந்திட ஆசை! 
தனி தமிழ் மடியில் 
தழைத்து முதிர்ச்சி அடைய ஆசை! 

- மூ.முத்துச்செல்வி

happy new year


you want


கடிகாரம்


எத்தனை வருடம் ஓடியும்
ஓயாமல் உழைத்தும்
முதிர்ச்சி ஏற்படாதது
தளர்ச்சி அடையாதது
கடிகார முள்...

-மூ.முத்துச்செல்வி

அவசர ஊர்தி


நம் தலையெழுத்தை நேராக்க
தன் தலையெழுத்தை 
தலைகீழாகக் கொண்டது 

-மூ.முத்துச்செல்வி

Thursday, 28 December 2017

முதிர்ந்த மரம்


வேள்வி தீயில்
உடனகட்டை ஏறக்
கொல்லையில்
காத்திருக்கும் 
 மரம்

-மூ.முத்துச்செல்வி

கண்கள்



வண்ணங்கள்  பல காட்டும்
விழிகளின் வண்ணம் 
என்னவோ 
கரும்பு வெள்ளையே!!!!

-மூ.முத்துச்செல்வி

Tuesday, 26 December 2017

மனதில் நீ


சுமை தாங்கும் ஆற்றில் 
சுகமாய் நீந்திச் செல்லும் 
மணற்துகள் போல்
சுமை தாங்கும் என் மனதில்
சுகமாய் அவளின் நினைவுகள்..

- மூ.முத்துச்செல்வி

Sunday, 24 December 2017

நீர்



வானம் கொடுத்ததை
வானமே எடுத்துக் 
கொள்கிறது..

-மூ.முத்துச்செல்வி

ஹைக்கூ



புல்லின் மீது
பூத்த பூஞ்சோலை -அவளின்
பாதச்சுவடு

-மூ.முத்துச்செல்வி

கண்ணாடி பிம்பம்



என் கண்களை
என் கண்களே
காணும் வியப்பு

- மூ.முத்துச்செல்வி

Saturday, 23 December 2017

சூரியன்


யாரிடம் கொண்ட நாணமோ 
முகம் காட்ட மறுக்கிறது 
இரவு வானில்.

-மூ.முத்துச்செல்வி

Friday, 22 December 2017

கருமை


வெண்மை தான்
உயர்வு என்றால்
ஏன் கருமையைப்
படைத்தாய் இறைவா!!

விழிதிரை கானும் காட்சி
கருப்பின் சிதலற்களே!
வெண்மை தாங்குவதால்
தெரியவில்லையோ
கருப்பின் அழகு..

கருமேக அழகில்
கசிந்த கண்ணீரின்
மழைத்துளி நிறமில்லை
என்பதால் கருமை
கனியவில்லையோ..

நிலவொளி போற்றும் வரிகளுக்கு
நிஜவொளி போற்ற மறந்தது ஏனோ??

நிழலின் நிறத்தில் இருப்பதனால்
நிஜங்களின் மனம் புரியவில்லையோ??

சிவப்பு குருதி் கண்ட
இதயங்கள் என்பதால்
சிவப்பைத் தேடுகிறதோ??

முடிகளில் கருமைத் தேடும்
கண்கள் முகங்களின்
கருமை வெறுப்பதேனோ!!

வர்ணிக்கபட வில்லை
என்றாலும்
வெறுக்கபடாமல் இருந்தால்
போதும்...

-மூ.முத்துச்செல்வி

Thursday, 21 December 2017

மெழுகுவர்த்தி



மெழுகின் மெளனம் 
புரியவில்லை என்பதால்
அழுது ஆறுதல் 
அடைகிறதோ!!!

இல்லை 
வறுமை திரியில்
வஞ்சத்தில் மூட்டிய
தீயின் ஆணவத்தில் 
தன்னை
எரிக்கிறதா!!

சுடரின் ஒளியில்
சிலிர்க்கும் தேக சூட்டில் 
சிலிர்த்து போனதா!!!

ஏதுவாயினும் நீயே
சொல்!!

-மூ.முத்துச்செல்வி

Wednesday, 20 December 2017

மழைக்குடை










வசந்தம் வாசல் வரும்
சில நேரம் வாசலில்
கறுப்புக்கொடி எதற்கு??

- மூ.முத்துச்செல்வி

my friends

ஹைக்கூ


தேர்தல் 
அறிவிப்புக் கேட்டு 
வெறுக்கிறது மனம் 
வெள்ளை நிறத்தை..... 

- மூ.முத்துச்செல்வி


உன் நினைவிற்கு ஒரு மடல்



தூரக் கிழக்கில் வெளிப்படும் 
சூரிய ஒளிக்கற்றை என் 
கன்னங்களை வருடுவதை போல் 
தூர தேசத்தி லிருந்து வீசும் 
அவள் பாசம்.... 

உன் நினைவுகளில் நிமிடமுள் 
உருண்டு தேய்ந்தாலும் - ஓய்வின்றி 
நான் மட்டும் ஓடுகிறேன் உன் 
நினைவை சுமந்து... 

பனித்துளியில் பின்னிய 
பனிமாலை போல் - அவள் 
அகப் பனியில் உறைந்தது 
அகம்... 

என் குருதியில் கலந்திட்ட 
மதுவைப் போல் - என் நிலை 
மறந்து உன் நினைவுடன் திரிகிறேன்... 

நீரின் மேற்பரப்பில் விழும் 
ஒளிக்கற்றை பிரதிபலிப்பின் 
ஜுவாலை போல் - உன் 
நினைவின் பிரதிபலிப்பு என் 
இதயத்தை ஜுவாலை யாக்கியது... 

தாமரை இதழ் தேடும் 
சூரிய ஒளி போல் 
மனம் மதுரமான 
உன்னை தேடுகிறது ..... 

- மூ.முத்துச்செல்வி

Sunday, 17 December 2017

நட்பு



மௌனங்கள் பல 
இருந்தும் 
மரணிக்க மறுக்கும்  
நட்பு!! 

- மூ.முத்துச்செல்வி 

who is my close


Monday, 11 December 2017

காகிதம்


பேருந்து பயணம்


நிதம் பார்த்த இடம் 
நிதர்சன புதுமை 
சாலையோரக் கூத்து.....
தள்ளாடிய நிறுத்தங்கள்...
நிறுத்தங்களில் எல்லாம் 
ஒரே ஓசை 
நடத்துனரின் விசில்....

மெல்லிய இசை வருடும் 
காலை பயணம்...
இஸ்தரியாய் சட்டையைக் கசக்கும் 
கூட்டங்கள் இடையில் 
மாலை பயணம்...

இருக்கை சண்டை 
இருக்கமான மனங்கள்...
அலறும் நடத்துனர் 
அலட்டிக் கொள்ளும் 
அண்ணன், தம்பிகள்...

பயணத்தில் உதிர்த்த காதல் 
நிறுத்தத்தில் காணாமல் போன காதல்

குழந்தை அழுகை 
பெரியவர் அறிவுரை 
இவைகளுக்கு இடையில் 
பேருந்து பயணம்......

-மூ.முத்துச்செல்வி

Sunday, 10 December 2017

ஹைக்கூ

ஹைக்கூ

மனித புகைவண்டியில் 
புகையுடன் போகிறது 
உயிரும்!! 

- மூ.முத்துச்செல்வி

ஹைக்கூ




கிராம சிறுவரின் 
விளையாட்டு மைதானம் 
வற்றிய ஏரி... 

- மூ.முத்துச்செல்வி

ஹைக்கூ




பசியில் அழுகின்றதுக் 
குழந்தை!!! 
சிலை, காகித பதாகைக்கு 
பாலபிஷேகம் 

- மூ.முத்துச்செல்வி

நானும் ஒருவன்!!


அழும் குழந்தையிடம் 
அகிம்சை வேண்டும் 
அழகில் நாணும் மங்கையிடம் 
அகிம்சை வேண்டும் 
அழகை ரசிக்குமிடம் 
அகிம்சை வேண்டும் 
உள்ள கிளர்ச்சியின் போது 
அகிம்சை வேண்டும் 
சர்ச்சைக்கு வழிவிடும் 
சண்டைகளுக்கு 
அகிம்சை வேண்டும் 
மனம் நெருடும் போது 
அகிம்சை வேண்டும் 

அகிம்சை வேண்டும்!! 
அகிம்சை வேண்டும்!! 

ஆனால் 
பிறர் தாக்கும் போது 
தடுக்கும் துணிவு வேண்டும்!! 
பிறர் வீழ்த்தும் போது 
எதிர்க்கும் தைரியம் வேண்டும்!! 
தோல்வியின் போது 
வெற்றியின் மீது நம்பிக்கை வேண்டும்!! 
மூடன் ஆக்கும் 
மூடர்கள் மேல் கோபம் வேண்டும்!! 

ஏன் என்றால்!! 
நாம் 
அகிம்சைவாதியும் அல்ல 
அடிமைவாதியும் அல்ல 
வன்முறையாளனும் அல்ல 
வேதம் அறிந்தவனும் அல்ல 
நாத்திகனும் அல்ல 
படைப்பாளியும் அல்ல 
பகையாளியும் அல்ல 
காலம் தேடி திரியும் 
சாதாரண மனிதனே!! 

- மூ.முத்துச்செல்வி

oh god


சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...