ஆராரோ!
பாடுகிறேன் தூங்கிவிடு
உன் அன்னை
என்னை நீயும் படுத்தாதே!
பெண்ணாய் இங்கே பிறந்ததனால்
நூறு கைகளை நானும் கொண்டேன்
ஒன்றிக்கு கூட ஓய்வு இல்லை
அதை நானும் கண்டேன்.
ஆராரோ!
பாடுகிறேன் தூங்கிவிடு
உன் அன்னை
என்னை நீயும் படுத்தாதே!
பிறந்த இடத்திலோ நான் செல்லப்பிள்ளை!
புகுந்த இடத்தில் நானோ
மல்லி இலை!
தூக்கம் எனது இல்லை
உனது என்று ஆனதம்மா!
என் உயிரை கூட
உனக்கு கொடுத்தேனம்மா!!
ஆராரோ!
பாடுகிறேன் தூங்கிவிடு
உன் அன்னை
என்னை நீயும் படுத்தாதே!
பள்ளி சென்றால் மாறிவிடும்
சொன்னது ஒரு கூட்டமம்மா
பணி சுமைகள்!
மட்டும்
இங்கே குறைவதில்லை
நீயும் பாரம்மா!
விடுமுறையிலும் ஓய்வு
என்பது இங்கு இல்லை
என்னைப் பற்றி
ஏன் இங்கு கவலை கொள்வதில்லை....
ஆராரோ!
பாடுகிறேன் தூங்கி விடு ......
தூங்கிவிடு!
- முத்து துரை
No comments:
Post a Comment