உள்ளம் வெள்ளையானதே
கருமையும் உடைந்து போனதே
உள்ளம் வெள்ளையானதே
மனமே என் மனமே!
கருப்பு நிற சிலைகளுக்கும்
என் மனசுக்கும் ஒற்றுமை
இருக்கிறதோ
இரண்டுமே உணர்ச்சி அற்றதுவோ!
அற்றதுவோ!
நிழலின் நிறத்திலே இருப்பதனால்
நிஜங்கள் இங்கே புரிவதில்லை!
நிலவை வர்ணிக்கும்
வரிகளுமே
நிஜத்தில் இங்கே மறைத்திடுமே
கருமையை தான்!
ஓ ஓ !
உள்ளம் வெள்ளையானதே
கருமையும் உடைந்து போனதே!!
ஓ ஓ ஓ!
பிம்பம் காட்டிடும் கண்களை தான்
பிரம்மனும் படைத்தான்
கருப்பாக!
கருப்பு கலையென்று
சொல்லிடும் மனங்களுமே
கருமையை ஏன் மணப்பதில்லை!
மணம் வீசும் பூக்களுமே
மலர்கிறதே
மலர்கிறதே
இரவின் மடியிலே மலர்கிறதே!
கருமை இல்லை
என்றால்
உலகம் இங்கே சுழல்வதில்லை!
கருமையை வெறுத்திடும் முகங்களுமே
முடிகளில் கருமையைத் தேடுகிறதே!
தேடுகிறதே!
உள்ளம் வெள்ளையானதே
கருமையும் உடைந்து போனதே
உள்ளம் வெள்ளையானதே
கருமையும் உடைந்து போனதே!
- முத்து துரை
No comments:
Post a Comment