Monday, 3 March 2025

ஆராரோ

ஆராரோ 

நீயே இங்கு பாடி விடு!

உன் கன்னம் 

நீயே இங்கு வருடி விடு!


உன்னைப் பற்றி  சிந்திக்க 

இங்கே யாருமில்லை!

உன் சிரிப்பின் ரசனையை அனுபவிக்கும் 

கண்கள் இங்குமில்லை!



பறவைகள் தூவிய 

விதை போல் உன்னை நீயே வளர்த்து விடு


தனியென்று கண்ணே நீயும் கலங்காதே!

உன் துணை என்று கரம் பிடிக்கும் வருந்தாதே!


தாயும் இல்லை

 தந்தையும் இல்லை 

என்று ஏங்காதே!


அவர்கள் செய்த 

தவறுக்கு நீயும் வருந்தாதே!



ஆராரோ 

நீயே இங்கு பாடி விடு!

உன் கன்னம் 

நீயே இங்கு வருடி விடு!



அகழிகள் சூழ்ந்த உலகமடா

அகிம்சையாய் நீயும் வந்தாயடா!


அன்னை வரம் வேண்டும் 

ஆயிரம் உள்ளங்கள் இங்கே இருக்குதடா!

அவர்களின் கையிலே

 நீயும் கிடைக்கவில்லையடா!



ஆராரோ 

நீயே இங்கு பாடி விடு!

உன் கன்னம் 

நீயே இங்கு வருடி விடு!

ஆராரோ 




உன்னைப் பற்றி  சிந்திக்க 

இங்கே யாருமில்லை!

உன் சிரிப்பின் ரசனையை அனுபவிக்கும் 

கண்கள் இங்குமில்லை!



ஆராரோ 

நீயே இங்கு பாடி விடு!

உன் கன்னம் 

நீயே இங்கு வருடி விடு!


ஆசையின் அவசரத்தில் வந்த கவிதை நான்!

ஆதரவில்லா குழந்தை நான்!


யார் யாரோ வந்து விட்டு செல்கின்றார்

என் அன்னை நீ எங்கே சென்றாயோ?


ஆராரோ 

நானே இங்கு பாடி விட்டேன்!

என் கன்னம் 

நானே இங்கு வருடி விட்டேன்!



 


- முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...