Sunday, 23 March 2025

அழகு

பக்கா அழகுல

பக்குவமா என்ன

சாட்சி     சாட்சிபுட்டியே! 


அத்தமவளே

அழகா நீயும்

பொறந்துபுட்டியே!

அழகா பொறந்துபுட்டியே!





மாமங்காரன் நான் 

முற மாமங்காரன் நான் 

மயங்கிபுட்டேனே! -உன் அழகுல

மயங்கிபுட்டேனே! 


பக்கா அழகுல

 என்ன என்ன

நீயும்

சாட்சிபுட்டியே! 



கண்ணாடி வளவில

கட்டங்கட்டி என்ன

கட்டிப்புட்டியே!


கருமையை தடவி 

கருவிழியால்

கவுத்துபுட்டியே!


கண்டாங்கி புடவை 

கட்டி கட்டி 

இழுத்துபுட்டியே!


மாமன் நானும் தான் 

மாட்டிகிட்டேனே! 

உன் அழகுல 

மாட்டிகிட்டேனே! 



பக்கா அழகுல

பக்கா அழகுல!!



- முத்து துரை




Wednesday, 5 March 2025

நிலா!

தாநனனனா தாநனனனா!

தாநனனனா தாநனனனா


ஒத்த நிலவு நீ

மொத்த அழகுல

சித்தம் சிதைக்கிற 

சித்தம் சிதைக்கிற 


வட்ட வடிவில

சொட்டு உசுரையும்

சொக்கி எடுக்கிற

சொக்கி எடுக்கிற!




சேவல் கூவையில

மின்னி மின்னி தான்

கிரங்க அடிக்கிற.....


நீயும் கிரங்க அடிக்கிற !


ஒத்தப் பாதையில 

கண்ணாமூச்சியா

சுத்தும் சூரியனும் கண்டுபிடிக்கல 

உன்ன கண்டுபிடிக்கல



சுட்டெரிக்கும் சூரியனிடம்

குளிர் காயுற - நீதான் 

குளிர் காயுற...



காட்டிக் கொடுக்குது 

விண்மீன்களும்

உன் வெட்கத்தை 

காட்டிக் கொடுக்குது....


ஒத்த நிலவு நீ

மொத்த அழகுல

சித்தம் சிதைக்கிற ....


பொட்டு வச்ச பௌர்ணமியும் 

பொத்தி பொத்தி வளருது


கோபத்தால் திரும்பி கெடக்குற 

அம்மாவாசை இருளிலே ......


ஆய்வு நடக்குது 

ஆய்வு நடக்குது 

உன்ன முழுசா தெரிஞ்சுக்க தான் 

ஆய்வு நடக்குது!


ஒத்த நிலவு நீ

மொத்த அழகுல

சித்தம் சிதைக்கிற

சித்தம் சிதைக்கிற ....



வட்ட வடிவில

சொட்டு உசுரையும்

சொக்கி எடுக்கிற 

சொக்கி எடுக்கிற ......


- முத்து துரை

Tuesday, 4 March 2025

அன்னையின் புலம்பல்

ஆராரோ!

பாடுகிறேன் தூங்கிவிடு

உன் அன்னை 

என்னை நீயும் படுத்தாதே!


பெண்ணாய் இங்கே பிறந்ததனால்

நூறு கைகளை நானும் கொண்டேன்


ஒன்றிக்கு கூட ஓய்வு இல்லை 

அதை நானும் கண்டேன்.


ஆராரோ!

பாடுகிறேன் தூங்கிவிடு

உன் அன்னை 

என்னை நீயும் படுத்தாதே!



பிறந்த இடத்திலோ  நான் செல்லப்பிள்ளை!

புகுந்த இடத்தில் நானோ

மல்லி இலை!


தூக்கம் எனது இல்லை 

உனது என்று ஆனதம்மா!

என் உயிரை கூட 

உனக்கு  கொடுத்தேனம்மா!!


ஆராரோ!

பாடுகிறேன் தூங்கிவிடு

உன் அன்னை 

என்னை நீயும் படுத்தாதே!



பள்ளி சென்றால் மாறிவிடும் 

சொன்னது ஒரு கூட்டமம்மா

பணி சுமைகள்!

மட்டும் 

இங்கே குறைவதில்லை 

நீயும் பாரம்மா!


விடுமுறையிலும் ஓய்வு 

என்பது இங்கு இல்லை

என்னைப் பற்றி 

ஏன் இங்கு கவலை கொள்வதில்லை....


ஆராரோ!

பாடுகிறேன் தூங்கி விடு ......

தூங்கிவிடு!



- முத்து துரை


Monday, 3 March 2025

ஆராரோ

ஆராரோ 

நீயே இங்கு பாடி விடு!

உன் கன்னம் 

நீயே இங்கு வருடி விடு!


உன்னைப் பற்றி  சிந்திக்க 

இங்கே யாருமில்லை!

உன் சிரிப்பின் ரசனையை அனுபவிக்கும் 

கண்கள் இங்குமில்லை!



பறவைகள் தூவிய 

விதை போல் உன்னை நீயே வளர்த்து விடு


தனியென்று கண்ணே நீயும் கலங்காதே!

உன் துணை என்று கரம் பிடிக்கும் வருந்தாதே!


தாயும் இல்லை

 தந்தையும் இல்லை 

என்று ஏங்காதே!


அவர்கள் செய்த 

தவறுக்கு நீயும் வருந்தாதே!



ஆராரோ 

நீயே இங்கு பாடி விடு!

உன் கன்னம் 

நீயே இங்கு வருடி விடு!



அகழிகள் சூழ்ந்த உலகமடா

அகிம்சையாய் நீயும் வந்தாயடா!


அன்னை வரம் வேண்டும் 

ஆயிரம் உள்ளங்கள் இங்கே இருக்குதடா!

அவர்களின் கையிலே

 நீயும் கிடைக்கவில்லையடா!



ஆராரோ 

நீயே இங்கு பாடி விடு!

உன் கன்னம் 

நீயே இங்கு வருடி விடு!

ஆராரோ 




உன்னைப் பற்றி  சிந்திக்க 

இங்கே யாருமில்லை!

உன் சிரிப்பின் ரசனையை அனுபவிக்கும் 

கண்கள் இங்குமில்லை!



ஆராரோ 

நீயே இங்கு பாடி விடு!

உன் கன்னம் 

நீயே இங்கு வருடி விடு!


ஆசையின் அவசரத்தில் வந்த கவிதை நான்!

ஆதரவில்லா குழந்தை நான்!


யார் யாரோ வந்து விட்டு செல்கின்றார்

என் அன்னை நீ எங்கே சென்றாயோ?


ஆராரோ 

நானே இங்கு பாடி விட்டேன்!

என் கன்னம் 

நானே இங்கு வருடி விட்டேன்!



 


- முத்து துரை

Sunday, 2 March 2025

நீ

ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ

ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ

ம்ஹூம் ஹூம்ம்ம் ம்ஹூம்


காதலில் நானும் விழுந்தேனோ!
விழுந்தேனோ!

கரைகளை நானும் அடைவேனோ!
அடைவேனோ!

உன் கைகளை நெருங்கவே 
என் கைகள் ஏங்குதம்மா!

பதில்களை சீக்கிரம் தருவாயோ
தருவாயோ!

மழையின் மென்மை 
வருடும் முன்னே
வெயிலின் தாக்கம் தொடங்கியதே!

காதலின் மென்மை தொடங்கும் முன்னே
பிரிவின் தாக்கம் சூழ்ந்ததம்மா!

நிலவை நான் பிடிக்க முயலும் முன்னே
எதிரில் நீ வந்து நின்றாய்

கடலை நான் கடக்கும் முன்னே 
கரையாய் என் முன்னே நீ வந்தாய் 


ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ




உன் கைகளை நெருங்கவே 
என் கைகள் ஏங்குதம்மா!

பதில்களை சீக்கிரம் தருவாயோ
தருவாயோ!



மழலை மொழிகள் புரிவதில்லை
அன்னை தவிர அறிவதில்லை
நான் பேசும் மொழிகள் 
புரிவதில்லை
உன்னை தவிர 
உன்னை தவிர


பழங்களின் சுவைகள் 
மறைவதில்லை
நாவிற்கு மீண்டும் கேட்கிறதே!

உன்னுடைய நினைவும் 
மறப்பதில்லை
திரும்ப திரும்ப 
மலர்கிறதே! 
மலர்கிறதே!


வேர்களை விட்டு 
வீழ்ந்தாலும் 
மரங்களை வேர்கள் 
வெறுப்பதில்லை


என்னை விட்டு 
போனாலும் 
உந்தன் நினைவு 
வெறுப்பதில்லை!
வெறுப்பதில்லை!

ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ


காதலில் நானும் விழுந்தேனோ!
விழுந்தேனோ!

கரைகளை நானும் அடைவேனோ!
அடைவேனோ!

உன் கைகளை நெருங்கவே 
என் கைகள் ஏங்குதம்மா!

பதில்களை சீக்கிரம் தருவாயோ
தருவாயோ!


- முத்து துரை

Saturday, 1 March 2025

கருப்பு



உள்ளம் வெள்ளையானதே

கருமையும் உடைந்து போனதே

உள்ளம் வெள்ளையானதே

மனமே என் மனமே!



கருப்பு நிற சிலைகளுக்கும்

என் மனசுக்கும் ஒற்றுமை

இருக்கிறதோ

இரண்டுமே உணர்ச்சி அற்றதுவோ!

அற்றதுவோ!


 நிழலின் நிறத்திலே இருப்பதனால்

நிஜங்கள் இங்கே புரிவதில்லை!


நிலவை வர்ணிக்கும் 

வரிகளுமே 

நிஜத்தில் இங்கே மறைத்திடுமே

கருமையை தான்!


ஓ ஓ !


உள்ளம் வெள்ளையானதே

கருமையும் உடைந்து போனதே!!


ஓ ஓ ஓ!



பிம்பம் காட்டிடும் கண்களை தான் 

பிரம்மனும் படைத்தான் 

கருப்பாக!


கருப்பு கலையென்று 

சொல்லிடும் மனங்களுமே

கருமையை ஏன் மணப்பதில்லை!


மணம் வீசும் பூக்களுமே

மலர்கிறதே 

மலர்கிறதே

இரவின் மடியிலே மலர்கிறதே!


கருமை இல்லை 

என்றால் 

உலகம் இங்கே சுழல்வதில்லை!


கருமையை வெறுத்திடும் முகங்களுமே

முடிகளில் கருமையைத் தேடுகிறதே!

தேடுகிறதே!



உள்ளம் வெள்ளையானதே

கருமையும் உடைந்து போனதே


உள்ளம் வெள்ளையானதே

கருமையும் உடைந்து போனதே!


- முத்து துரை



சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...