Sunday, 15 June 2025

காதலியில்லா காதலன்

காதலை தந்திடும் காதலன் 

நான் இங்கே - என்

காதலி நீ எங்கே?


பிரிவு ஒன்று வந்ததால்

பிரிந்தது இந்த உறவும் தான்



என் ஆணவமா? - இல்லை

 உன் ஆணவமா?

எது பிரித்தது நம் காதலை !


நீ இன்றி நான் இல்லை 

புரிந்தது இப்பொழுது ......

வருவாய் எந்தன் காதலே !


என் காதலி நீ எங்கே?

நீ!!! எங்கே?


இரவில்லா பகலாக !

நீயில்லா நானாக!


மழையில்லா பயிராக

நீயில்லா நானாக!



உயிரில்லா உடலாக

நீயில்லா நானாக!


உயிரே! ..........வருவாய்!

என் காதலே வருவாய்!


- முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...