விண்ணில் அழகிய நிலவை தான்
உன்னில் மறைத்து வைத்தாயோ!
மண்ணில் உருவிய கிழங்கை போல்
என்னில் உருவிய - இதயத்தை
எங்கே கொண்டு சென்றாயோ?
எந்தன் அன்னை ஈன்றது போல்
உந்தன் மூச்சில் பிறந்தேனே!
மீண்டும் பிறந்தேனே!
என்னில் உருவிய இதயத்தை
எங்கே கொண்டு சென்றாயோ?
வருவாய் எந்தன் கைகோர்த்து
நாளை என்றும் நீதானே! - என்
நாளை என்றும் நீதானே!
மலரை சுமக்கும்
மழலைப் போல் - உன்னை
இதமாய் சுமந்தேனே!
அந்தகனுக்கு திரும்பிய பார்வை போல்
உன்னை வியந்து வியந்து பார்த்தேனே!
என்னில் உருவிய இதயத்தை
எங்கே கொண்டு சென்றாயோ?
விண்ணில் அழகிய நிலவை தான்
உன்னில் மறைத்து வைத்தாயோ!
பூவுக்குள் மறைந்த கனிகள் போல்
உன்னில் என்னை மறைத்தாயோ?
உன்னில் இருக்கும் காதலை
சொல்வாய்
எந்தன் காதலே !
என்னில் உருவிய இதயத்தை
எங்கே கொண்டு சென்றாயோ?
- முத்து துரை
No comments:
Post a Comment