Saturday, 14 June 2025

அப்பா!


என் புள்ள நீ 

சுகமா வளர .....

என் உதிரம் நான் கொடுப்பேன்!



உயிராய் வந்தாய் 

உறவை தந்தாய்  - புது

உறவை தந்தாய்!


உன்னை முதலில் பார்த்தவன் நானே!

என் மூச்சி வரை - இறுதி

மூச்சி வரை காப்பேனே!......


 நீ மெத்தையில தூங்க கண்ணே!

தாங்கும் தரையாய் மாறினேனே!


என் புள்ள நீ 

சுகமா வளர .....




 ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்.........


தாய் தந்த உடல் தானே

நான் தந்த உயிர் தானே

உன்னையும், தாயையும் காப்பேனே 

உயிரே..............


மார் மேல் உதைத்தாய்

மன்னிப்பேனே!


நீ செய்த தவறுகளும்

மன்னிப்பேனே!


பேசாமல் நகர்ந்த நாட்களையும்

மன்னிப்பேனே!


என் புள்ள நீ 

சுகமா வளர .....


ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்........


என்றும் 

புரிவதில்லை என் பாசம் !



- முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...