Tuesday, 24 June 2025

உன்

Male: 


பெண்ணே! ஓ ஓஹோ!...

காற்றே! காற்றே! 

தீண்டும் காற்றே! 

நீதானோ! நீ தானோ!


Female: 

கண்ணே! கண்ணே! 

மோகம் எல்லாம் - உயிர் 

மோகம் எல்லாம் 

நீதானோ! நீ தானோ!


நினைவோ உந்தன் நினைவோ!



Male:

புல்வெளியில் போகும் இடம்

உன் கூந்தல் வருடல் தானோ!


பூங்காற்றின் தீண்டல்களோ

உன் சுவாச மோதல் தானோ!


நினைவோ உந்தன் நினைவோ!



Female:

சாதத்தின் நீர் குமிழ்களோ

உன் வியர்வை துளிகள் தானோ!


மேகத்தின் நெருக்கங்களோ

உன் தோளின் சீண்டல் தானோ!


நினைவோ உந்தன் நினைவோ!





Chorus:

நினைவோ உந்தன் நினவோ!

மின்னல் என வந்தாய் 

கண்ணில் முழுவதும் நின்றாய் 

நினைவோ உந்தன் நினவோ!

ஓஹோ!.......



Male:

உயிரே! உயிரே! 

உறவை தந்திட வா வா!.......


Female: 

கனவே! கனவே! 

கலையாமல் நீயும் வா  வா!.....


நினைவோ உந்தன் நினைவோ!

நினைவோ உந்தன் நினைவோ!


- முத்து துரை


No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...