Tuesday, 24 June 2025

உன்

Male: 


பெண்ணே! ஓ ஓஹோ!...

காற்றே! காற்றே! 

தீண்டும் காற்றே! 

நீதானோ! நீ தானோ!


Female: 

கண்ணே! கண்ணே! 

மோகம் எல்லாம் - உயிர் 

மோகம் எல்லாம் 

நீதானோ! நீ தானோ!


நினைவோ உந்தன் நினைவோ!



Male:

புல்வெளியில் போகும் இடம்

உன் கூந்தல் வருடல் தானோ!


பூங்காற்றின் தீண்டல்களோ

உன் சுவாச மோதல் தானோ!


நினைவோ உந்தன் நினைவோ!



Female:

சாதத்தின் நீர் குமிழ்களோ

உன் வியர்வை துளிகள் தானோ!


மேகத்தின் நெருக்கங்களோ

உன் தோளின் சீண்டல் தானோ!


நினைவோ உந்தன் நினைவோ!





Chorus:

நினைவோ உந்தன் நினவோ!

மின்னல் என வந்தாய் 

கண்ணில் முழுவதும் நின்றாய் 

நினைவோ உந்தன் நினவோ!

ஓஹோ!.......



Male:

உயிரே! உயிரே! 

உறவை தந்திட வா வா!.......


Female: 

கனவே! கனவே! 

கலையாமல் நீயும் வா  வா!.....


நினைவோ உந்தன் நினைவோ!

நினைவோ உந்தன் நினைவோ!


- முத்து துரை


Sunday, 15 June 2025

காதலியில்லா காதலன்

காதலை தந்திடும் காதலன் 

நான் இங்கே - என்

காதலி நீ எங்கே?


பிரிவு ஒன்று வந்ததால்

பிரிந்தது இந்த உறவும் தான்



என் ஆணவமா? - இல்லை

 உன் ஆணவமா?

எது பிரித்தது நம் காதலை !


நீ இன்றி நான் இல்லை 

புரிந்தது இப்பொழுது ......

வருவாய் எந்தன் காதலே !


என் காதலி நீ எங்கே?

நீ!!! எங்கே?


இரவில்லா பகலாக !

நீயில்லா நானாக!


மழையில்லா பயிராக

நீயில்லா நானாக!



உயிரில்லா உடலாக

நீயில்லா நானாக!


உயிரே! ..........வருவாய்!

என் காதலே வருவாய்!


- முத்து துரை

Saturday, 14 June 2025

அப்பா!


என் புள்ள நீ 

சுகமா வளர .....

என் உதிரம் நான் கொடுப்பேன்!



உயிராய் வந்தாய் 

உறவை தந்தாய்  - புது

உறவை தந்தாய்!


உன்னை முதலில் பார்த்தவன் நானே!

என் மூச்சி வரை - இறுதி

மூச்சி வரை காப்பேனே!......


 நீ மெத்தையில தூங்க கண்ணே!

தாங்கும் தரையாய் மாறினேனே!


என் புள்ள நீ 

சுகமா வளர .....




 ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்.........


தாய் தந்த உடல் தானே

நான் தந்த உயிர் தானே

உன்னையும், தாயையும் காப்பேனே 

உயிரே..............


மார் மேல் உதைத்தாய்

மன்னிப்பேனே!


நீ செய்த தவறுகளும்

மன்னிப்பேனே!


பேசாமல் நகர்ந்த நாட்களையும்

மன்னிப்பேனே!


என் புள்ள நீ 

சுகமா வளர .....


ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்........


என்றும் 

புரிவதில்லை என் பாசம் !



- முத்து துரை

Wednesday, 11 June 2025

உன்னில்!


விண்ணில் அழகிய நிலவை தான்

உன்னில் மறைத்து வைத்தாயோ!



மண்ணில் உருவிய கிழங்கை போல்

என்னில் உருவிய  - இதயத்தை

எங்கே கொண்டு சென்றாயோ?




எந்தன் அன்னை ஈன்றது போல்

உந்தன் மூச்சில் பிறந்தேனே!

மீண்டும் பிறந்தேனே!



என்னில் உருவிய இதயத்தை

எங்கே கொண்டு சென்றாயோ?




வருவாய் எந்தன் கைகோர்த்து

நாளை என்றும் நீதானே! - என் 

நாளை என்றும் நீதானே!



மலரை சுமக்கும்

மழலைப் போல் - உன்னை 

இதமாய் சுமந்தேனே!


அந்தகனுக்கு திரும்பிய பார்வை போல்

உன்னை வியந்து வியந்து பார்த்தேனே!



என்னில் உருவிய இதயத்தை

எங்கே கொண்டு சென்றாயோ?


விண்ணில் அழகிய நிலவை தான்

உன்னில் மறைத்து வைத்தாயோ!



பூவுக்குள் மறைந்த கனிகள் போல்

உன்னில் என்னை மறைத்தாயோ?



உன்னில் இருக்கும் காதலை

சொல்வாய் 

எந்தன் காதலே !



என்னில் உருவிய இதயத்தை

எங்கே கொண்டு சென்றாயோ?


- முத்து துரை

Tuesday, 10 June 2025

கனவு காதல்

அத்தி ஒன்னு

முத்தம் ஒன்னு

முத்தம் ஒன்னு

முத்தம் ஒன்னு



ஓ ஹோ ஹோ ஹோ ஹோ!


கனவில் வந்து 

கள்வம் செய்து

கலபம் நீயும் தந்தாயோ!



இன்று வந்தாய் 

இன்பம் தந்தாய்

நாளை நீயும் வருவாயோ?


அத்தி ஒன்னு

முத்தம் ஒன்னு

ஓ ஹோ ஹோ ஹோ ஹோ!


ம் ம் ம் ம் ம் ..............




நான் வந்தேன் 

நீ சென்றாய் 

தோழியும் பரிகாசம் செய்தாளே!


கற்பனை காதலே !

காதலை காதலை

அள்ளி அள்ளி தந்தாயே!



அத்தி ஒன்னு

முத்தம் ஒன்னு

பூத்து பூத்து சென்றாயோ!




இன்னும் இன்னும் 

கற்பனையில் வந்து வந்து

கொல்வாயோ?


என்னை

நீயும் கொல்வாயோ?



- முத்து துரை






Wednesday, 4 June 2025

நட்பு

 

நிழல் என்றும்  

நிழல் என்றும்  

நீங்காதே!


என்


நிழல் என்றும்  

நிழல் என்றும்  

நீங்காதே!


மனம் என்றும் 

மனம் என்றும் 

மறக்காதே!


உன்னைப் போன்ற சிநேகத்தை

என்றும் மறக்காதே 

என் மனம் மறக்காதே!


நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!


தோல்விகள் தோல்விகள் வந்தால் வந்தால்

தூக்கிடும் தூக்கிடும் உன் கைகள் என்றும்

கவசம் என் கவசம் என்றும் நீதான் நட்பே!


இசைவேன் இசைவேன் என்றும்

உன் வார்த்தைக்கு இசைவேன் என்றும்



நிழல் என்றும்  

நிழல் என்றும்  

நீங்காதே!


உன்னைப் போன்ற சிநேகத்தை!!!!!!


என்றும் மறக்காதே 

என் மனம் மறக்காதே!




என் யோசனை 

என்றும் 

உன் யோசனை!!!!!



நம்பினேன் நம்பினேன் 

நானுமே உன்னை!


நட்பே நட்பே  - என் 

நட்பே நட்பே!



- முத்து துரை 








சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...