Friday, 31 July 2020

வெளிச்சம்

இருளின் எதிரி
இரும்பின் கதிர்
கண்ணாடி பதுமை
பளிச்சிடும் புதுமை
இருப்பிடம் அளித்து
பொத்தான் கொண்டு
வேண்டும் நேரம்
மின்னும் மின்மினி
பார்வை பல
பார்த்தவர் பல
வாழ்வு முடிந்ததும்
குப்பைமேடில்...

- முத்து துரை சூர்யா



Friday, 24 July 2020

மனசாட்சி

மெல்ல நீ பேசுவாய்
மௌனத்தில் நான் இருப்பேன்

கவலைகள் உன்னிடம் நான் சொல்ல
காதோரம் நீ பேசுவாய்

மகிழ்ச்சியின் முதல் ரசிகை
நீ தான்
அதில் நான் நிலைத்திருக்க
செய்பவளும் நீ தான்...

தோழி போல் உடன் வருவாய்
உன் வருகை இன்றி
நான் சென்றதில்லை எங்கும்..

பல விடயங்கள் உன்னிடம் மட்டும்
பதில் நமக்குள் மட்டும்
பல விஷயங்கள் நீ அறிவாய்
பாலம் போல் நீ இருந்தாய்...

நீ எந்தன் மனசுக்குள்
மனசாட்சியே!

- முத்து துரை சூர்யா

Thursday, 16 July 2020

நீ போகயிலே


கண்டாங்கி சேலை கட்டி
கண்ணே நீ போகயிலே
முந்தானை முன்
மண்டியிட்டதடி மனம்...
பட்டு சேலை கட்டி
பரபரப்பாய் நீ போகயிலே
கொசுவத்தில் மனம் பிண்ணிக்கொண்டதடி...
பருத்தி சேலை கட்டி
பக்குவமாய் நீ போகயிலே
பால் நிலா போல்
மனம் பருவம் கொண்டதடி...
தாவணி கட்டி
தாளம் போட்டு  நீ போகயிலே!
தளர்ந்ததடி மனம்...

- முத்து துரை சூர்யா


பெண்ணே......
உன்னை கருவில் சுமக்க அன்று வெறுத்தால்..
உன் தாயான ஒரு பெண்...
இன்றும் சில நிலத்தில் நீ வெறுக்கத்தான் படுகிறாய்
ஒரு கருத்தமாவை போல....
பெண்ணாய் நீ சாதனை படைத்தாளும்....
உன்னை ஒரு விலைப் பொருளாக பார்க்கிறது..
வரதர்ச்சனை என்ற பேரில்.....
இன்னும் கொடுமையான இந்த உலகில்
இந்த நிலை மாற என்ன செய்யப் போகிறாயாடி....
விலை பொருளான உன்னை மாற்ற....
காதல் மட்டும்தான் சரி என்றால்-இந்த
உலகில் உண்மை காதல் யாரிடமும் இல்லையடி....
அப்படி இருந்தால் ஜாதிகள் இடை நிற்கிறதே!....
தாய்மையான உன்னை தன் தாயை போல
தங்கை போல பார்க்க மறுப்பது ஏனோ....
பெண்ணுக்கு பெண்ணேதான் எதிரியடி....
அவர்களை வெல்ல ஒரு போதும் உன்னால் முடிவதில்லை....
இந்த உலகில் உன் நிலைதான் என்ன பெண்ணே
தெரிந்தால் எனக்கும் சொல்லடி..
இந்த கொடிய உலகை வெல்ல.....

-மூ.முத்துச்செல்வி

Saturday, 11 July 2020

இன்றைய நிலை

எட்டி பிடிக்கும் தூரத்தில்
நீ இருந்தும்
கட்டி தழுவ முடியவில்லை...

தொட்டு பேசும் தூரத்தில்
நீ இருந்தும்
தொட முடியவில்லை...


கிட்ட நின்று பேச
நினைத்தும்
எட்டி நின்று
உரையாடுகிறோம்...

முத்தங்கள் பொழிய
நீ இருந்தும்
முகமுடி தடுக்கிறது...

இன்றைய நிலை
இப்படி இருக்க

என்று மாறுமோ!
இந்த நிலை றை

- முத்து துரை சூர்யா

Thursday, 9 July 2020

தூரிகை





மெல்லிய காலை வேளை
மௌனமாய் என் கைகளில்
வடித்த கோடும்
வடிவம் கொண்டது...
அழகிய பதுமை
அழகிய இயற்கை
அழகிற்கு ஒரு மொழி
வண்ணங்களில் திழைத்து
மெருக்கேற்றிய வண்ணம்
விரித்த முடியில்
விரிகின்ற வடிவம்
தூரிகை நான்
தோகைக்கொண்டேன்
துள்ளலுடன் உருவம் படைத்தேன்...

-முத்து துரை சூர்யா


Wednesday, 8 July 2020

இயற்கை

நீரோடை மீன்கள் நாங்கள்
பம்பரம் போல் இருந்தோம்
பாய்மரமாய் கிழிந்தோம்
திசைகள் இல்லை இப்பொழுது...
 கூடுகள் இன்றி திரிந்தோம்
ஒரு கூடுகுள் அடைந்தோம்
மரண பயம் தந்தாய்
இயற்கையை புதுபித்தாய்
மதத்தை மறக்க வைத்தாய்
வாழ்வை கற்பிதாய்
வாழும் வேளை
வாழ்வை தர வேண்டும்...

- முத்து துரை சூர்யா

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...