ஈசனே!
எந்தன் நேசனே!
ஈசனே! நேசனே!
நீர் குடம்!!!
நீர் குடம்!!!
நீந்தி நீந்தி....
ஆயிரம் ஓர் ஆயிரம்
வீரர்கள் வென்று
பிண்டம் மென் பிண்டம் நுழைந்து
தவமாய் கடும் தவமாய்
உருவம் கொண்டு வந்தேன்
இவ்வுலகம் வந்தேன்......
ஏந்திய தாயின் மீதிலே!....
எட்டி எட்டி மிதித்தேன் தீதிலே!...
ஏட்டு கல்வி தான் படித்தேன்
எட்டு திசையும் அலைந்தேன்!
எல்லாம் நானே!
என்று மதிக்கா நானே!
ஈசனே!
எந்தன் நேசனே!
என் குடம் உடையும் நேரம்
மண் குடமாய் போகும் நேரம்
என்னம்மெல்லாம் கண்டேன் உன்னை
எத்துனை எத்துனை தவறுகள் செய்தேன்
எத்துணை எத்துனை வலிகள் கொடுத்தேன்
நித்திரையில் உன்னை அடைந்தேன்
இறுதி
நித்திரையில் உன்னை அடைந்தேன்.....
ஈசனே! ஈசனே!
எந்தன் நேசனே!
நேரிலே எந்தன் நேரிலே!
வாழ்விலே எந்தன் வாழ்விலே!
நீதானே என்றும் நீதானே!
நானுமே நானுமே!
கர்வம் கலைந்ததே!
நீயுமே! நீயுமே!
ஈசனே!
எந்தன் நேசனே!
ஈசனே!
எந்தன் நேசனே!
நேசனே!
ஈசனே!
எந்தன் நேசனே!
- முத்து துரை
No comments:
Post a Comment