Thursday, 29 May 2025
உருக்கேடு!.
Monday, 26 May 2025
மாயை!
மாயையே! மாயையே!
எல்லாம் மாயையே!
ஞானியாய் ஞானியாய்
ஆன பின்
எல்லாம் மாயையே!
மயங்கினேன் நானுமே!
விழுந்தேனே நானுமே!
மாயையில்! மாயையில்!
ஓஹோ ஹோ!
ஆசைகள் அலைமோதியே!
ஆரவரம் செய்ததே!!
ஆதிக்கம் வந்ததே!
எல்லாம் மாயையே!
மாயையே! மாயையே!
எல்லாம் மாயையே!
கனவுகள் பல வந்து
கலவரம் பல கண்டு
கண்ணீர்கள் பல சிந்தி
எல்லாம் மாயையே! யே!......
பிறந்த பலன் புரியாமல்
வளர்ந்த பயன் அறியாமல்
முதிர்ந்த பின்
எல்லாம் மாயையே யே!........
மாயையே! மாயையே!
எல்லாம் மாயையே!
ஞானியாய் ஞானியாய்
ஆன பின்
எல்லாம் மாயையே!
- முத்து துரை
Friday, 23 May 2025
ஈசன்.
ஈசனே!
எந்தன் நேசனே!
ஈசனே! நேசனே!
நீர் குடம்!!!
நீர் குடம்!!!
நீந்தி நீந்தி....
ஆயிரம் ஓர் ஆயிரம்
வீரர்கள் வென்று
பிண்டம் மென் பிண்டம் நுழைந்து
தவமாய் கடும் தவமாய்
உருவம் கொண்டு வந்தேன்
இவ்வுலகம் வந்தேன்......
ஏந்திய தாயின் மீதிலே!....
எட்டி எட்டி மிதித்தேன் தீதிலே!...
ஏட்டு கல்வி தான் படித்தேன்
எட்டு திசையும் அலைந்தேன்!
எல்லாம் நானே!
என்று மதிக்கா நானே!
ஈசனே!
எந்தன் நேசனே!
என் குடம் உடையும் நேரம்
மண் குடமாய் போகும் நேரம்
என்னம்மெல்லாம் கண்டேன் உன்னை
எத்துனை எத்துனை தவறுகள் செய்தேன்
எத்துணை எத்துனை வலிகள் கொடுத்தேன்
நித்திரையில் உன்னை அடைந்தேன்
இறுதி
நித்திரையில் உன்னை அடைந்தேன்.....
ஈசனே! ஈசனே!
எந்தன் நேசனே!
நேரிலே எந்தன் நேரிலே!
வாழ்விலே எந்தன் வாழ்விலே!
நீதானே என்றும் நீதானே!
நானுமே நானுமே!
கர்வம் கலைந்ததே!
நீயுமே! நீயுமே!
ஈசனே!
எந்தன் நேசனே!
ஈசனே!
எந்தன் நேசனே!
நேசனே!
ஈசனே!
எந்தன் நேசனே!
- முத்து துரை
சாலையோரம்.
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...
-
பெரு அலைகள் அதில் தத்தளிக்கும் சிறு ஓடம் போல் - காதலே உன் நினைவுகள்....... கூந்தல் கோதிட்ட விரல்கள் நகக்கண்களை குத்திக்கொண்டு.....
-
இடிகளின் இச்சையில் உடைந்திட்ட பனை மரம் போல் - உடைந்த என் நெஞ்சம் - மறக்க செய்கிறது குழந்தை சிரிப்புப் போல் மலர்கிற உன் நினைவு சுமைகள...
-
பிறை நிலவை தூது அனுப்பினேன் உன் மோக கண்ணை நோக்கியதால் முழுமதி ஆனது... நீலக்கடலை தூது அனுப்பினேன் உன் கால்கள் தொட்டதால் வெண் பூ அல...