Thursday, 14 August 2025

சாலையோரம்.



சாலையோரம் 
மழைதுளியின் ஈரம் ஈரம்
மானே! மானே! 
உன் முகங்கள் தானே!

தேனே! தேனே! 
திகட்டாத தேனே! தேனே!

ஓஹோ!..


அருகில் உந்தன் முகமே!
தொலைவில் சென்ற ரணமே !
என் ரணமே!

கண்ணுக்குள்ளே! நுழைந்தாய்!
உருவம் மொத்தம் பொதிந்தாய்
வலைத்தள தேடல் எல்லாம் 
நீயே! நீயே!


மானே! மானே! 
உன் முகங்கள் தானே!

சாலையோரம்
ஓஹோ!.... 


கண்ணே! கண்ணே!
கண்ணமாவே! - பாரதியின்
கண்ணமாவே!


மரணம் வரையில் 
உந்தன் முகங்கள் தானே! 
தேனே தேனே! 
திகட்டாத தேனே!



மானே! மானே! 
உன் முகங்கள் தானே!

சாலையோரம்
ஓஹோ!.... 



- முத்து துரை


பெண் சுதந்திரம்

 சுதந்திர காற்று வீசட்டும்

சுதந்திரத்தை போற்றட்டும்


சுதந்திர காற்று வீசட்டும்

சுதந்திரத்தைப் போற்றட்டும்!


பெண்ணின் சுதந்திரத்தை போற்றட்டும்!


சுயம்வரம் திரும்பட்டும்

சுய மரியாதை  நிலைக்கட்டும்!

கலவரம் எல்லாம் முடியட்டும்


சுதந்திர காற்று வீசட்டும்

சுதந்திரத்தை போற்றட்டும்!



தைரியங்கள் பிறக்கட்டும்

சரித்திரம் படைக்கட்டும்

சீண்டல் எல்லாம் முடியட்டும் ...


சுதந்திர காற்று வீசட்டும்

சுதந்திரத்தை போற்றட்டும்!


- முத்து துரை



Saturday, 9 August 2025

தமிழ்நாடு

வந்தாரை வாழவைக்கும்

தமிழ்நாடு

தமிழ்நாடு - எங்கள் 

தமிழ்நாடு ......


நன்னானான னனா னனா...


தமிழ் மொழிக்கு இணை இல்லை

இணையில்லை  -எத்துணை 

தடை வந்தும்

தழைத்தோங்கும் தழைத்தோங்கும்.....


உயிர்களின் பிறப்பிற்கும்

உணர்வுகளின் வளர்ப்பிற்கும்

வரையறையே இங்கு வரையறையே !


நனனானா னனா னனா...

நனனானா னனா னனா...


முதன்மை மொழி என்றும் தமிழ் மொழியே

தமிழ் மொழியே ! - அனைத்து 

கண்டங்களும் அறிந்த தமிழ் மொழியே!

தலைமொழியே எங்கள் தலைமொழியே!



வந்தாரை வாழவைக்கும்

தமிழ்நாடு

தமிழ்நாடு - எங்கள் 

தமிழ்நாடு ......


சிற்பங்களின் நுணுக்கங்களும்

ஆராய்ச்சிகளின் அடிப்படையும்

அளவெடுத்து தந்த 

அறிவு மொழியே!


அழகிய வடிவமும்

இனிய இனிமையும்

தரும் மொழியே! எங்கள்

 தமிழ் மொழியே!



வந்தாரை வாழவைக்கும்

தமிழ்நாடு

தமிழ்நாடு ......


- முத்து துரை






Thursday, 24 July 2025

ஓம்

ஓம் ஓம் ஓம்ம்ம்ம் ......

நமசிவாய!

சிவாய!.....

ஓம் !!!!


ஆலகால விஷத்தை

கழுத்தில் 

கழுத்தில் கழுத்தில்

மரணம் ஜனனம்

 உனதில் 

உனதில் 

நீல நீல நீலகண்டா ....

திரு நீல நீல கண்டா கண்டா.....


போற்றி போற்றி 

உன் தாள் போற்றி!


ஐந்து எழுத்து அதிபதியே!

சரணம் சரணம் ....

உடுக்கை ஒலியே

ஓம் ஓம் ஓம் ஓம்...!


பஞ்சபூதமும் உன்னில் சரணம்....

தேவர்களுக்கு தேவா!

மகாதேவா தேவா!....



ஆலகால விஷத்தை

கழுத்தில் கழுத்தில்


அண்டம் பிண்டம் எல்லாம்

அளந்த  ஈசா ஈசா!!

கயிலை மலை வேந்தே!

பாதம் தேடி அடைந்தோம் 

சரணம் சரணம்..




ஓம் ஓம் ஓம்ம்ம்ம் ......

நமசிவாய!

சிவாய!.....

ஓம் !!!!


- முத்து துரை






Tuesday, 8 July 2025

வா வா!

விதையே விதையே எழுந்துவா!

நீ வளர வேண்டும்

வளர்ந்து வா!



மனதில் முளைத்த!! விதையே

நீ!

நீ!

எழுந்து வா!


மரமாய் வளர வேண்டும்

விரைந்து வா!


தோல்விகள் தோல்விகள்!

வேருக்கு ஊற்றாகி

வேங்கை போல 

விரைந்து வா!


பக்க கிளைகள் 

பார்க்காது பக்குவமாகி

வளர்ந்து வா!


புகழில் மயங்காமல்

விண்ணோக்கி 

வளர்ந்து வா!


விதையே விதையே

மனதில் முளைத்த விதையே

வா! வா!



தூக்கம் வேண்டாம் போ போ!

சோர்வே சோர்வே போ போ!

சுற்றும் விழியே போ போ!

சுகங்கள் வேண்டாம் போ போ!

வசை சொல்லே போ போ!

வளர வேண்டும் போ போ!



வெற்றி கனியை 

பறிக்கும் வரை 

விதையே விதையே!

மரமாய் மரமாய்!!!!!



- முத்து துரை


Wednesday, 2 July 2025

நமசிவாய!

ஓம் நம சிவாய!

ஓம் !!!!!

ஓம் நம சிவாய!


போதை போதை  போதை 

என்று திரிந்த தேகமே!


பேதை பேதை பேதை 

போல் அலைந்த தேகமே!




ஜனனம் மரணம் 

இடையில் 

ஆடும் ஆட்டமே!

ஆடும் ஆட்டமே!


ஓம் நமசிவாய ஓம்

ஓம் நமசிவாய!

ஓம் நமசிவாய!




பொல்லாப்பு,  பொல்லாமை 

வளர்த்த தேகமே!

வளர்த்த தேகமே!



பிறர் வளர்ச்சி கண்டு 

வளர்ச்சி கண்டு 

பொறாமை கொண்டதே!


வஞ்சம், சூது, துன்பம், தீது

கொடுக்கும் தேகமே!


பொய்மை பொருட்டு

கோபம் எல்லாம் விலக வேண்டுமே!


ஓம் நமசிவாய ஓம்

ஓம் நமசிவாய!


சிவாய நாமம் 

சிவாய நாமம் 

ஓதி  ஓதியே !


பொறுமை கொண்டு

பொறுமை கொண்டு

வாழ வேண்டுமே!


ஓம் நமசிவாய ஓம்

ஓம் நமசிவாய!


- முத்து துரை

Tuesday, 24 June 2025

உன்

Male: 


பெண்ணே! ஓ ஓஹோ!...

காற்றே! காற்றே! 

தீண்டும் காற்றே! 

நீதானோ! நீ தானோ!


Female: 

கண்ணே! கண்ணே! 

மோகம் எல்லாம் - உயிர் 

மோகம் எல்லாம் 

நீதானோ! நீ தானோ!


நினைவோ உந்தன் நினைவோ!



Male:

புல்வெளியில் போகும் இடம்

உன் கூந்தல் வருடல் தானோ!


பூங்காற்றின் தீண்டல்களோ

உன் சுவாச மோதல் தானோ!


நினைவோ உந்தன் நினைவோ!



Female:

சாதத்தின் நீர் குமிழ்களோ

உன் வியர்வை துளிகள் தானோ!


மேகத்தின் நெருக்கங்களோ

உன் தோளின் சீண்டல் தானோ!


நினைவோ உந்தன் நினைவோ!





Chorus:

நினைவோ உந்தன் நினவோ!

மின்னல் என வந்தாய் 

கண்ணில் முழுவதும் நின்றாய் 

நினைவோ உந்தன் நினவோ!

ஓஹோ!.......



Male:

உயிரே! உயிரே! 

உறவை தந்திட வா வா!.......


Female: 

கனவே! கனவே! 

கலையாமல் நீயும் வா  வா!.....


நினைவோ உந்தன் நினைவோ!

நினைவோ உந்தன் நினைவோ!


- முத்து துரை


சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...