வந்தாரை வாழவைக்கும்
தமிழ்நாடு
தமிழ்நாடு - எங்கள்
தமிழ்நாடு ......
நன்னானான னனா னனா...
தமிழ் மொழிக்கு இணை இல்லை
இணையில்லை -எத்துணை
தடை வந்தும்
தழைத்தோங்கும் தழைத்தோங்கும்.....
உயிர்களின் பிறப்பிற்கும்
உணர்வுகளின் வளர்ப்பிற்கும்
வரையறையே இங்கு வரையறையே !
நனனானா னனா னனா...
நனனானா னனா னனா...
முதன்மை மொழி என்றும் தமிழ் மொழியே
தமிழ் மொழியே ! - அனைத்து
கண்டங்களும் அறிந்த தமிழ் மொழியே!
தலைமொழியே எங்கள் தலைமொழியே!
வந்தாரை வாழவைக்கும்
தமிழ்நாடு
தமிழ்நாடு - எங்கள்
தமிழ்நாடு ......
சிற்பங்களின் நுணுக்கங்களும்
ஆராய்ச்சிகளின் அடிப்படையும்
அளவெடுத்து தந்த
அறிவு மொழியே!
அழகிய வடிவமும்
இனிய இனிமையும்
தரும் மொழியே! எங்கள்
தமிழ் மொழியே!
வந்தாரை வாழவைக்கும்
தமிழ்நாடு
தமிழ்நாடு ......
- முத்து துரை
No comments:
Post a Comment