Tuesday, 8 July 2025

வா வா!

விதையே விதையே எழுந்துவா!

நீ வளர வேண்டும்

வளர்ந்து வா!



மனதில் முளைத்த!! விதையே

நீ!

நீ!

எழுந்து வா!


மரமாய் வளர வேண்டும்

விரைந்து வா!


தோல்விகள் தோல்விகள்!

வேருக்கு ஊற்றாகி

வேங்கை போல 

விரைந்து வா!


பக்க கிளைகள் 

பார்க்காது பக்குவமாகி

வளர்ந்து வா!


புகழில் மயங்காமல்

விண்ணோக்கி 

வளர்ந்து வா!


விதையே விதையே

மனதில் முளைத்த விதையே

வா! வா!



தூக்கம் வேண்டாம் போ போ!

சோர்வே சோர்வே போ போ!

சுற்றும் விழியே போ போ!

சுகங்கள் வேண்டாம் போ போ!

வசை சொல்லே போ போ!

வளர வேண்டும் போ போ!



வெற்றி கனியை 

பறிக்கும் வரை 

விதையே விதையே!

மரமாய் மரமாய்!!!!!



- முத்து துரை


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...