Tuesday, 5 January 2021

தோழியா? காதலியா?

 

பெண்ணே!
தோழியாய் உன்னை காணும்போது
கண்களில் கண்ணீர் வந்தது இல்லை
காதலியாய் பார்க்கும்போது
கண்ணில் வேதனை வருவது ஏனோ?

தோழியாய் நீ நின்றபோது
மனதில் உறுதி வந்தது
காதலியாய் ஆன பிறகு
காதலின் வலி தெரிகிறது...

தோழியாய் நீ இருந்தாய்
மனம் தூறல் போல் இருந்தது
காதலியாய் நீ மாறினாய்
காமத்தின் பிடியில் மனம் ஊசலாடுகிறது...

தோழி உன் விரல் கோர்க்கும்போது
கடுக்களவு கூட காமம் வந்ததில்லை
காதலி உன் விரல் தீண்டும் போது
ஏதோ உள்ளுகுள் ஒரு ஆனந்தம்...

சொல் பெண்ணே!
நீ எனக்கு தோழியா? காதலியா?

- முத்துதுரைசூர்யா


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...