யார் நான் ?
மனிதனா இல்லை மிருகமா?
எதற்கு வந்தேன் இங்கே?
ஏன் இந்த வாழ்வு வாழ்கிறேன்?
யாருக்கு உழைக்கிறேன்
ஏன் இப்படி உருகுகிறேன்?
ஆள பிறந்தேனா?
அடிமையாக பிறந்தேனா?
வாழ பிறந்தேனா?
வாழ்விக்க பிறந்தேனா?
பாவத்தின் பயனா?
புண்ணியத்தின் விருச்சமா?
அழிக்க வந்தேனா?
உருவாக்க வந்தேனா?
பண்பால் சிறந்தேனா?
சினதால் நிலைத்தேனா?
குணத்தை கற்பித்தேனா?
குற்றத்தை செய்தேனா?
அறிவில் உயர்ந்தேனா?
அறிவற்று கிடந்தேனா?
பகிர்வில் வாழ்வேனா?
பாசத்தை துறந்தேனா?
யார் நான் ?
யார் நான்?
கேள்விகளை சுமந்த
சாதாரண மனிதனா?
- முத்துதுரைசூர்யா