அழகென்று நினைத்தால்
அற்புதமாக தெரிகிறாள்..
அழிவென்று நினைத்தால்
அரணென்று இருக்கிறாள்...
அசட்டுடன் நெருங்கினால்
அசராமல் வதைக்கிறாள்...
அழுகின்ற பொழுது
ஆறுதல் தருகிறாள்..
அடைக்கலம் தேடும் போது
அன்னையென மாறுகிறாள்..
அடிக்கும் போது
அமைதி காக்கிறாள்...
அரவணைப்பாய் என்றால்
அசுரன் ஆகிறாள்..
அழகா ?
ஆபத்தா?
எல்லாம் அனுகுபவர் கைகளிலோ..
என் இனிய இயற்கையே!
- முத்து துரை