Thursday, 10 November 2022

யார் நான்?

 என் நிழல்களுக்கு பின்னால் நின்று

என் நிஜங்களை தேடுகிறேன் 


என் இதயம் நொறுங்கும் சத்தத்தை

எட்ட நின்று கேட்கிறேன் 


நான் யார் ?

நான் என்ன ?

யோசித்தும் விடையில்லை என்னுள் ..


எதற்காக இந்த பிறவி 

எதற்காக இந்த நொடி

எதற்காக எல்லாம் 


பல வித கேள்விகள் 

பதில் இல்லை என்னுள் 


என்ன சாதிக்க பிறந்தேன் 

என்ன சோதிக்க பிறந்தேன் 

என்ன என்ன 

விடையில்லா நான்!


- முத்து துரை சூர்யா நிரஞ்சனா









Monday, 16 May 2022

அவள் அருகில்

பகல் நட்சத்திரம்
தூரிகை தீட்டிய கண்கள்...

ஆழிகிணறில் மூழ்கிய 
வெண் முத்துக்கள் பற்கள்...

மேககூட்டத்திற்கு இடையே
வீற்றிர்க்கும் வானவில் முகம்...

தென்னை ஓலையில் கூவிடும்
தென்றலை ரசித்திடும் கூந்தல்...

கானவெளியில் காணக்கிடைக்காத
குந்தலுக்குள் புதைந்த காதுகள்...

சிந்திய அமுத சொல்லுக்கு
சிந்தை முழுதும் செவிகளை கேட்கும் என் வேண்டுதல்...

ஆருடம் எல்லாம் உன் நினைவு
ஆருடல் தேடிடும் உன் அருகாமை

- முத்து துரை

உலகம்

உன்னத உலகம்
உண்மையை மட்டும் 
உரைபதில்லை

- முத்து துரை 

Sunday, 20 March 2022

உன்னால்

முதுமை முடியும்வரை

முதல்வா உன் மடியில்

முற்றும் துறந்தேன்

முடிவில்லா உன் காதலால்...


காதல் காதல் என்று 

கை பிடித்தாய்

தாரம் தாரம் என்று

தட்டி கொடுத்தாய்...


உன்னால் சிகரம் தொடுவேன்

உன்னால் மேன்மை காண்பேன்...

உன்னால் எல்லாம் பெறுவேன்...


- முத்து துரை

Wednesday, 2 February 2022

ஏமாற்றம்

எதில் இல்லை ஏமாற்றம்?

பார்க்கும் பசுமையில் 

ஆர்ப்பரிக்கும் அலையில்

விழுந்துகிடக்கும் மணலில்

வீரமிடும் நடையில்

தோள் தேடும் தனிமையில்

கதிரவனின் காலையில்

நிலவின் இரவில்

நிழலின் தேடலில்

கனிந்த காதலில்

களவாடிய விழிகளில்

ஏமாற்றம் எனக்கொன்றும் புதிதில்லை

இருந்தும் மனம் வலிக்கிறது 

அவனிடம் ஏமாறுகயில்...


- முத்து துரை



சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...