Monday, 21 April 2025

வாழ்கை

கண்ணாடி கோப்பையா

கவிழ்ந்தது இந்த வாழ்க்கையா?



முன்னாடி நீ இருக்க!

முதிர்ந்தது இந்த வேட்கையா?


சொல்லாடி சொல்லாடி சோர்வுற்று போனதே! 

சொர்க்கமா? நரகமா? 

கண்ணீரில் போனதே!


பாச கயிறு இழுக்க

பார்வைகள் எல்லாம் இழுக்க

நல்லதும் கெட்டதும் இருக்க

நல்லுடலும் சாஞ்சதே! 


கண்ணாடி கோப்பையா

கவிழ்ந்தது இந்த வாழ்க்கையா?

முன்னாடி நீ இருக்க!

முதிர்ந்தது இந்த வேட்கையா?

தந்நானனா !தந்நானனா னா...



விதியின் வலிமையா!

விரட்டிடும் நாட்களே

விடைபெறும் மனமும் 

விடைபெறும் மனமும்


முன்னாடி நீ இருக்க!

முதிர்ந்தது இந்த வேட்கையா?



கண்ணாடி கோப்பையா!!!!!!!


- முத்து துரை


சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...