வாழ்க்கை எதற்கு
என்ன சாதிக்க பிறந்தேன்
என்ன வாழ பிறந்தேன்
எதுவும் இன்றி இருக்கிறேன்
எதிர்பார்ப்புகள் இருந்தும்
எதிர்பார்ப்பதை தவிர்த்தேன்
ஆசை பட்டும்
ஆதிக்கம் செலுத்த தெரியவில்லை
கனவுகள் இருந்தும்
கவனிக்க முடியவில்லை
கவலைகள் மட்டும் சுமக்கிறேன்
கரம் பிடிக்க கைகள் இல்லை
தோல்விகள் மட்டும் - ஆறுதல் தரும்
தோழி ஒருத்தி இல்லயே!
வலிகளும் ஏமாற்றமும்
வாழ்வில் நிலை இல்லை தான்
ஆனாலும்
மனம் எதிர்பார்க்கிறது
என் வாழ்வின் இறுதி நொடி இதுவாக இருக்கக்கூடாதா?
- முத்து