Wednesday, 14 July 2021

நலமுடன் இரு!

 என் மார்பை கசிந்து

உன் பசியை போக்கினாய்

என் குருதியை உரிந்து உரிந்து

உன் ஆசையை வளர்த்தாய்

என் இளமையை துறந்தேன்

உன் இளமை மேம்பட

என் முதுமையை கூட கொடுத்தேன்

உன் இளமை நலம் பெற

என் கனவை மறந்தேன்

உன் வளர்ச்சியை கண்டு

என் தூக்கம் மறந்தேன் 

உன் துள்ளலை கண்டு

எல்லாம் இழந்தேன்

என் மகனே உனக்காக 

இன்று என் மனதையும் இழக்கிறேன்

முதியோர் இல்லம் செல்ல...


மனம் இல்லை உன்னை பிரிய

வேறு வழி இல்லை உன்னுடன் இருக்க...

செல்கிறேன் மகனே 

நலமுடன் இரு!


- முத்துதுரைசூர்யா

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...