வேண்டாம்
அந்த வஞ்சப்புகழ்
பாசம் தேடி அலையும் இதயமே!
வேண்டாம்
அந்த கூர்மையான பாச ஈட்டி
மென்மை வார்த்தை தேடும் செவியே!
வேண்டாம்
அந்த சுடும் வார்த்தைகள்
எதுவும் வேண்டாம் மனமே
ஓய்வு மட்டும் போதும்
அமைதி தேடி அலையும் மனமே!
எடுத்துக்கொள்
அந்த ஆழ்ந்த நித்திரையை.
-மூ.முத்துச்செல்வி