Friday, 24 July 2026

நீட் வேண்டாம்

மருத்துவம் காசாய் போகுதே!

மறைமுகமாய் எங்களை சாய்க்குதே!


அரசியல்!! அரசியல்!!!

அடிமையாக நாங்களும்....


உயிர் பறிக்கும் 

உயிர் பறிக்கும் 

உதவா தேர்வுகளும்....



நீட் வேண்டாம் என்று...

நாள் தோறும் 

நாள் தோறும் 

நாம் மட்டும் போனோம்....


மருத்துவம் காசாய் போகுதே!

மறைமுகமாய் எங்களை சாய்க்குதே!


- முத்து துரை 


Saturday, 18 July 2026

என்னோடு வா!....

 உன் கனவுகள் நிஜமாக 

என்னோடு வா!....


உன் சரித்திரம் உருவாக 

என்னோடு வா!

உன் எண்ணம் செழிப்பாக 

என்னோடு வா!


தலைவன் என்றும் 

உன் தலைவன் என்றும் 

என்னோடு வா!!!! 


பொறுமை வேண்டாம் 

பொற்காலம் வேண்டும் வா!!!!


வரும் தலைமுறை சிறக்க வேண்டும் 

வா வா வா!!!!!

Friday, 17 July 2026

நிமிர்ந்தோம்



லஞ்சம் தவிர்!

நெஞ்சம் நிமிர்!

உரக்க சொல்லும் தலைவா!

உன்னால் உன்னால்  எல்லாம் 

இனி நன்மையாகுமே!


வேட்டைக்காரா! விரட்டும் வேட்டைக்காரா!

உன் வருகை 

சிலருக்கு பயத்தை காட்டுமே!


அரசவை அழகாய் 

மாற்றிய 

அறிஞனே!


உன்னால் இன்று 

லஞ்சம் தவிர்த்தோம் 

நெஞ்சம் நிமிர்ந்தோமே!!



லஞ்சம் தவிர்!

நெஞ்சம் நிமிர்!

உரக்க சொல்லும் தலைவா!

உன்னால் உன்னால் எல்லாம் 

இனி நன்மையாகுமே!


- முத்து துரை 




Sunday, 12 July 2026

எழுந்து வா

வா வா எழுந்து வா!

நீ! நீ! முயன்று வா!

உன்னால் உன்னால் எல்லாம் நடக்கும்

எழுந்து வா !!!!


உனக்கு நீயே துணை 

துணிந்து வா!

குறை குறை கூறும் உலகில்

நிறை என்றும் நீதான்

எழுந்து வா!!!


பாசம், வேசம் எல்லாம் விலக்கி 

உயர்ந்து போக வேண்டும் வா! 

உயரம் என்றும் உனதாக வா வா!


- முத்து துரை 






நீட் வேண்டாம்

மருத்துவம் காசாய் போகுதே! மறைமுகமாய் எங்களை சாய்க்குதே! அரசியல்!! அரசியல்!!! அடிமையாக நாங்களும்.... உயிர் பறிக்கும்  உயிர் பறிக்கும்  உதவா த...