Thursday, 10 November 2022

யார் நான்?

 என் நிழல்களுக்கு பின்னால் நின்று

என் நிஜங்களை தேடுகிறேன் 


என் இதயம் நொறுங்கும் சத்தத்தை

எட்ட நின்று கேட்கிறேன் 


நான் யார் ?

நான் என்ன ?

யோசித்தும் விடையில்லை என்னுள் ..


எதற்காக இந்த பிறவி 

எதற்காக இந்த நொடி

எதற்காக எல்லாம் 


பல வித கேள்விகள் 

பதில் இல்லை என்னுள் 


என்ன சாதிக்க பிறந்தேன் 

என்ன சோதிக்க பிறந்தேன் 

என்ன என்ன 

விடையில்லா நான்!


- முத்து துரை சூர்யா நிரஞ்சனா









நீட் வேண்டாம்

மருத்துவம் காசாய் போகுதே! மறைமுகமாய் எங்களை சாய்க்குதே! அரசியல்!! அரசியல்!!! அடிமையாக நாங்களும்.... உயிர் பறிக்கும்  உயிர் பறிக்கும்  உதவா த...